நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் ஏழு கருடசேவை!
ADDED :3710 days ago
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் ஸப்த(ஏழு) கருடசேவை மூன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காரைக்கால் நித்ய கல்யாணபெருமாள் கோவிலில் கருடபஞ்சமியான நேற்று ஸப்த(ஏழு) கருட சேவை நிகழ்ச்சி நேற்று காலை 9 மணிக்கு துவங்கியது. காரைக்கால் மாவட்டத்தில் திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்,வீழி வரதராஜபெருமாள், நிரவி கரியமாணிக்க பெருமாள், வரிச்சிகுடி வரதராஜபெருமாள், தென்னங்குடி சவுரிராஜபெருமாள், கோவில்பத்து கோதண்டராமர், காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவில்களில் இருந்து வந்திருந்த எம்பெருமாள்களுக்கு மஞ்சல் பொடி,பால்,தேன்,சந்தனம் உள்ளிட்ட பலவகையான திரவங்களால் ஆபிஷேகம் மற்றும் திருமஞ்சனம், மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.