உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகர் கோவிலில் நாக பஞ்சமி சிறப்பு பூஜை

நாகர் கோவிலில் நாக பஞ்சமி சிறப்பு பூஜை

ஈரோடு: நாக பஞ்சமியை முன்னிட்டு, நாகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஈரோடு, காரைவாய்க்காலில் உள்ள நாகர் கோவிலில், விஸ்வகர்ம சார்பில் நாக பஞ்சமி விழா நடந்தது. இதையொட்டி காலை விக்னேஸ்வரர் பூஜை, நாகர் ஸகஸ்ர நாமம், ஹோமம், பால் அபிஷேகம், வெள்ளி கவசம் அணிவித்தல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடந்தது. தொடர்ந்து மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நேற்று காலை முதல் ஏராளமான பெண்கள், ஆண்கள் தோஷ நிவர்த்திக்காக வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !