காணியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :3718 days ago
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழா கடந்த, 11ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, கொடியேற்றம், ஸ்வாமி திருக்கல்யாணம், ஏணிபந்தம், கரகாட்டம், பல்லக்கு உற்சவம் நடந்தது. நேற்று காலை, 11 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. அப்போது காணியம்மன் ஸ்வாமியின் மீது முத்துக்கொட்டை, உப்பு, மிளகு ஆகியவற்றை இறைத்து பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.