சோழர் காலத்து சிவன் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :3718 days ago
ஆலங்குடி: திருவரங்குளத்தில் உள்ள சோழர் காலத்து சிவன் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் நாள் திருவிழாவில், ஸ்வாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, ஐதீக முறைப்படி ஸ்வாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் செய்தனர். கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.