உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகசுந்தரி கோவிலில் நாக பஞ்சமி விழா

நாகசுந்தரி கோவிலில் நாக பஞ்சமி விழா

குமாரபாளையம்: குமாரபாளையம் நாகசுந்தரி கோவிலில், நாக பஞ்சமியை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. குமாரபாளையம் நாகசுந்தரி கோவிலில், நேற்று, அஷ்ட நாக மகா ஹோமம் நடந்தது. காலசர்ப்ப தோஷம், புத்திர பேறு இல்லாதவர்கள், திருமணத்தடை, மாலை சுற்றி பிறந்த குழந்தைகளின் பெற்றோர் என, ஏராளமானோர் பங்கேற்று நாகேஸ்வரி அம்மனை வழிபட்டனர். விழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !