கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் 7.45 லட்சம் ரூபாய் உண்டியல் வசூல்
ADDED :3670 days ago
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் இங்கு தேவியை கும்பிடுகின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை இங்கு உண்டியல் திறந்து எண்ணப்படுகிறது. இந்த மாதம் அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. பல்வேறு பக்தர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், விவேகானந்தா பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் பணத்தை எண்ணினர். மொத்தம் 7.45 லட்சம் ரூபாய் வசூல் ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.