விரதம் இருப்பவர்கள் சாப்பிடாமல் தான் இருக்க வேண்டுமா?
ADDED :3755 days ago
இறையுணர்வை அடைய உதவும் சாதனம் விரதம். விரத நாளில் உணவு, உறக்கம், சுக போகங்களை மறந்து முழுமையாக இறை சிந்தனையில் ஈடுபட வேண்டும். ஒரு வேளை மட்டும் உண்ண வேண்டும். காலை, இரவில் பால், பழம் சேர்த்துக் கொள்ளலாம்; தவறில்லை. விரதம் என்பதற்கு, உறுதியான தீர்மானம் என்பது பொருள். இறை சிந்தனையில் மன உறுதியோடு ஈடுபட்டாலே, விரதம் இருந்த பலன் கிடைத்து விடும்.