உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே, 200 ஆண்டுக்கு மேல் பழமைவாய்ந்த திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று, ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது. மடத்துக்குளம் அருகே வஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள், இப்பகுதியில் வசித்ததாக நிலவும் ஐதீகத்தின் அடிப்படையில், 200 ஆண்டுக்கு முன் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலை புதுப்பிக்கும் பணி, சில ஆண்டுக்கு முன் தொடங்கியது. விஸ்தரித்து கட்டப்பட்ட கோவிலில், புதிய கோபுரம், முன் மண்டபங்கள், புதிய சிலைகள், குதிரை வாகனங்கள் நிறுவப்பட்டன. சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கும்பாபிஷேக விழா, ஆக.,18 மாலை, 6:00 மணிக்கு முதல் கால யாக பூஜையுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று நான்காம் கால யாக பூஜை முடிவில், மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கும்பாபிஷேகத்தை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !