உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்!

முத்தாலம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்!

புதுச்சேரி : வைத்திக்குப்பம் முத்தாலம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.இரவு விநயாகர் மற்றும் ரிஷிப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இன்று 21ம் தேதி லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., தலைமையில் பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல், மாலை 3:00 மணிக்கு செடல் உற்சவம், மாலை 4:00 மணிக்கு தேரில் அம்மன் வீதியுலா நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !