உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

ஷீரடி சாய்பாபா கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

பழநி: பழநி சண்முகபுரம் ஷீரடி சாய்பாபா கோயில், மற்றும் ஒருங்கிணைந்த பிராத்தனைக் கூடத்தில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவைமுன்னிட்டு ஆக.,18ல் விநாயகர் வழிபாடு, ஆக.19ல் கணபதிபூஜை, நவக்கிர ஹோமம் குருபூஜையும், புதிய ஷீரடி சாய்பாபா சிலை கண்திறத்தல், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 5.45மணிக்கு புனிதநீர் நிரம்பிய கலசங்கம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காலை 7.50 மணிக்கு கோபுர விமானத்தில் கும்பகலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளித்தனர். அதைத் தொடர்ந்து ஷீரடி சாய்பாபாவிற்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !