பூண்டி மாதா பேராலயத்தில் சுயம்வரம்
ADDED :3814 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலய மக்கள் மன்றத்தில், மாதா அறக்கட்டளை சார்பில், கத்தோலிக்க கிறிஸ்துவ பிரிவை சேர்ந்தவர்களுக்கு சுயம்வரம் நடந்தது. பேராலய அதிபர் அமிர்தசாமி தலைமை வகித்து, சுயம்வர நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சுயம்வரத்தில், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பதிவு செய்துள்ள, 100க்கும் மேற்பட்டோர் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். பேராலய துணை அதிபர் அல்போன்ஸ் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார். விழா ஏற்பாடுகளை உதவி தந்தை ரெக்ஸ் அலெக்ஸ், சில்வஸ்டர் ஆகியோர் செய்தனர்.