உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் ஸ்ரீபிடாரி மாரியம்மன் தேர்த்திருவிழா

சேலம் ஸ்ரீபிடாரி மாரியம்மன் தேர்த்திருவிழா

சேலம்: சேலம், லத்துவாடி ஸ்ரீபிடாரி மாரியம்மன் கோவில், திருத்தேர்விழா இன்று நடக்கிறது. சேலம், கெங்கவல்லி வட்டம், திட்டச்சேரி லத்துவாடி ஸ்ரீபிடாரி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 18, 19 தேதிகளில், இரவு 8 மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், அக்னிசட்டி எடுத்தல், உருளுதண்டம், அலகு குத்துதல் நடந்தது. நேற்று மாலை, மாளவிக்கு பொங்கல் மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. இன்று காலை 6 மணிக்கு, புஷ்ப அலங்காரத்துடன் அம்மன் திருக்கல்யாணமும், காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை, அம்மனுக்கு திருமஞ்சன நீராட்டு விழாவும், ஆகஸ்ட் 23ம் தேதி செம்பியம்மனுக்கு மாவிளக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !