கோவில்களில் சினிமா சூட்டிங் நடத்த தடை?
ADDED :3754 days ago
சென்னை: கோவில்களில் சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிப்பது குறித்து, அறநிலையத்துறை பரிசீலித்து வருகிறது. கோவில்களில், சினிமா படப்பிடிப்பு நடத்தும் போது, சக்தி வாய்ந்த விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வெளிச்சத்தால், புராதன சிலைகள் மற்றும் ஓவியங்கள் பாதிக்கப்படுகின்றன, படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கக் கூடாது என, பல சமூகநல அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, கோவில்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிப்பது குறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.