உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி நாகமுத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

புதுச்சேரி நாகமுத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

புதுச்சேரி: காமாட்சியம்மன் கோவில் வீதியில் உள்ள நாகமுத்தம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேக விழா, கடந்த 18 ம் தேதி காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது.  19ம் தேதி காலை வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம்,  முதற்கால யாக பூஜை நடந்தது. ௨0ம் தேதி காலை 10:00 மணிக்கு இரண்டாம் கால பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு கோவில் விமானத்திற்கு, பட்டாச்சார்யார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணன்,  முன்னாள் கவுன்சிலர் குமரன், வழக்கறிஞர்கள் மருதுபாண்டியன், சிவசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !