அவிநாசி ஐயப்பன் கோவிலில் லட்சார்ச்சனை விழா!
ADDED :3754 days ago
அவிநாசி: ஐயப்பன் கோவிலில், முதலாம் ஆண்டு விழா, லட்சார்ச்சனை சிறப்பு வழிபாடு, நேற்று நடைபெற்றது. அவிநாசி, பைபாஸ் ரோடு அருகே உள்ள ஐயப்பன் கோவிலில், முதலாம் ஆண்டு விழா, விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. மகா சங்கல்பம், கணபதி ஹோமம், ஸ்ரீசாஸ்தா ஹோமம் ஆகியவற்றுக்கு பின், லட்சார்ச்சனை துவங்கியது. பெங்களூரு வாழும் கலை வேதாகம மகா பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் தலைமையில், ஹோமங்கள் நடைபெற்றன. அதன்பின், லட்சார்ச்சனை பூர்த்தி, மகா பூர்ணாஹுதி, மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள், ஸ்ரீசபரி சாஸ்தா அறக்கட்டளை நிர்வாகிகள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.