ஆஞ்சநேயர் கோவிலில் நாளை வைணவ மாநாடு
பாகூர்:மதுரகவி ஆழ்வார் சபை சார்பில் பாகூர் அடுத்த சேலியமேடு ஆஞ்சநேயர் கோவிலில் வைணவ மாநாடு நாளை (23ம் தேதி) நடக்கிறது.கவுரவ தலைவர் ஜானகிராமன் துவக்கி வைக்கிறார். தலைவர் ஜெய ராமச்சந்திரன் வரவேற்கிறார். வாசுதேவ ராமானுஜம் நோக்கவுரையாற்றுகிறார்.பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசிக்கிறார். கடலுார் லட்சுமி ராமனுஜ சுவாமி தலைமை தாங்குகிறார்.திண்டிவம் நம்மாழ்வார் சபை தலைவர் வெங்கடேச ராமனுஜ தாசர், விழுப்புரம் நம்மாழ்வார் ஐக்கிய வைணவ சபை தலைவர் கண்ணன் கிருஷ்ண ராமனுஜதாசர் முன்னிலை வகிக்கின்றனர். காலை 8.15 மணிக்கு, திருக்கோவிலுார் ஜீயர் சீனிவாச ராமனுஜாச்சாரியார் சுவாமியின் மங்களாஸ்சனம் நடக்கிறது.பின், பேராசிரியை சாந்தலட்சுமி ராமச்சந்திரன், ரங்காச்சாரியார், ராமசாமி ராமானுஜதாசனார், சீனிவாச ராமனுஜதாசர், கோவிந்த ராஜா ராமனுஜதாச ஏகாங்கி சுவாமிகள், கோகுலாச்சாரியார் சுவாமிகள், ரகுவீர பட்டாச்சாரியார் சுவாமிகள் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றுகின்றனர். செயலாளர் சீனுவாசன் நன்றி கூறுகிறார்.