ரூ.2 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு
ADDED :3815 days ago
வில்லிவாக்கம்: வில்லிவாக்கம், அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, சி.டி.எச்., சாலையில் ஒரு ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஆக்கிரமித்து, ரவிச்சந்திரன் என்பவர் கடை நடத்தி வந்தார். அவர், கோவிலுக்கு செலுத்த வேண்டிய, 8.12 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியையும் செலுத்தாமல் கடையை நடத்தி வந்தார். பலமுறை எச்சரிக்கை விடுத்தும், வாடகை செலுத்தவில்லை.போலீசாரின் உதவியுடன், இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், நேற்று, கடையை பூட்டி சீல் வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, 2 கோடி ரூபாய் என, கூறப்படுகிறது.