பழநி கோயிலில் ரூ.96 லட்சத்தில் கும்பாபிஷேகப் பணிகள்
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ரூ.96 லட்சம் செலவில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடக்கிறது. பழநி தைப்பூசத் திருவிழா ஊர்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கிறது. கடந்த 1998ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது 17 ஆண்டுகளுக்கு பின்குடமுழுக்கு விழா ரூ.96 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் உட்பிரகாரம், வெளிப்பிரகார மண்டபங்கள், சுவாமிசிலைகள் புதிதாகவும், தரைத்தளத்தில் கிராணைட் தளம் அமைத்தும், கோயிலின் உப சன்னதிகள், சிலைகள், மண்டப மேற்கூரைகளில் விரிசல் பழமைத்தன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" தொல்லியல் துறை ஆய்வாளர்கள், பொறியாளர்கள் ஆலோசனைப்படி குடமுழுக்கு விழா நடத்தப்படுகிறது. கோயில் நுழைவுப்பகுதி முதல் உட்பிரகாரம் வரை உள்ள பழங்கால சிலைகள், கல்தூண்கள், மண்டபங்கள் முழுமையாக புதுப்பிக்கும்பணி நடக்கிறது. பணிகளை விரைந்துமுடித்து 2016ல் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,என்றார்.