தியாகராஜபுரத்தில் சம்வத்சரா அபிஷேக தினம்!
ADDED :3706 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரத்தில் சம்வத்சரா அபிஷேக தின விழா நடந்தது. தியாகராஜபுரம் லஷ்மி நாராயண பெருமாள் கோவில் 9வது கும்பாபிஷேக தின விழா நடந்தது. இதையொட்டி காலை பிர்மஸ்ரீ விஸ்வநாத கணபதியடிகள், திருவண்ணாமலை பாலகிருஷ்ண சாஸ்திரி, அருண், லஷ்மிநாராயணா, ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மகன்யாச ருத்ர ஜபம், வருண ஜபம் நடந்தது. பின்னர் லஷ்மிநாராயண, அபித குசலாம்பிகா சமேத அருணாசலேஸ்வரர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. மல்லிகார்ஜுன அய்யர், ராஜப்பா மற்றும் முக்கிய பிரமுகர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.