உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் பாலாபிஷேகம்!

மாரியம்மன் கோவிலில் பாலாபிஷேகம்!

பண்ருட்டி: புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் செடல் திருவிழா முன்னிட்டு நேற்று பாலாபிஷேகம் நடந்தது. பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை  தொரப்பாடி பேரூராட்சியில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோவில் 11ம் ஆண்டு செடல் உற்சவ திருவிழா கடந்த 20ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி யது. 21ம் தேதி சக்தி கரகம் எடுத்து செடல் உற்சவமும், நேற்று முன்திமன் மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. நான்காம் நாளான நேற்று காலை 9:00  மணிக்கு பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷகமும், பகல் 12:00 மணிக்கு கஞ்சி வார்க்கப்பட்டது. இரவு அம்மன்  வீதியுலா நடைபெற்றது. இன்று24ம்தேதி காலை அம்மனுக்கு அபிேஷகம், மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்,  நாளை25ம்தேதி மாலை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !