வரசித்தி விநாயகர் கோவில் ரூ.67 லட்சம் காணிக்கை
ADDED :3800 days ago
நகரி : காணிப்பாக்கம், வரசித்தி விநாயகர் கோவில் உண்டியல் காணிக்கை, நேற்று எண்ணப்பட்டது.சித்துார் அடுத்த, காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில், 23 நாட்களுக்குப் பின் நேற்று, உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.இதில், 67 லட்சத்து, 78 ஆயிரத்து, 348 ரூபாயும், 30 கிராம் தங்கம் மற்றும் 680 கிராம் வெள்ளிப் பொருட்களும் இருந்தன. இந்த தகவலை, கோவில் செயல் அலுவலர் பூர்ணசந்திர ராவ் தெரிவித்துள்ளார்.