கன்னியாகுமரி பவகதி அம்மனுக்கு மூன்று நாள் ஓண சிறப்பு பூஜை!
ADDED :3711 days ago
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் மூன்று நாள் ஓண சிறப்பு பூஜை 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது. 27-ம் தேதி உத்திராடம் நட்சத்திரம், 28-ம் தேதி திருவோணம், 29-ம் தேதி அவிட்டம் நட்சத்திர தினங்களையொட்டி பகவதி அம்மனுக்கு ஓணக்கோடி அணிவித்து சிறப்பு பூஜை நடக்கிறது.
மூன்று நாட்களிலும் காலை பத்து மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து வைர கிரீடம், மூக்குத்தி அணிவித்து ஓண பட்டு உடுத்து தீபாராதனை நடைபெறும். இரவு எட்டு மணிக்கு அம்மன் பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.