வேளாங்கண்ணி ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்!
புதுச்சேரி: வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு, சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயம் நாகை மாவட்டத்தில் உள்ளது.
இங்கு, ஆண்டுதோறும் நடக்கும் ஆலய பெருவிழா மற்றும் கொடியேற்று விழாவில் ஏராளமானோர் பங்கேற்பர். இந்த ஆண்டின் பெருவிழா கொடியேற்றம், வரும் ௨௯ம் தேதி நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பாத யாத்திரையாக செல்கின்றனர். குறிப்பாக, சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியிலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
மூன்று சக்கர வாகனத்தில் சிறிய தேர் போல் அமைத்து, அதில் மாதா சொருபத்தை எழுந்தருளச் செய்து, உடன் செல்கின்றனர். பாத யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களுக்கு, வழியில் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் உணவு வழங்கப்படுகிறது.