உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி பாராயணம் பாடிய மாணவிகள்

சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி பாராயணம் பாடிய மாணவிகள்

மேலூர்; அழகர் கோவில் சுந்தரராசா மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 150 பேர் சோலைமலை முருகன் கோயிலில் நடந்த கந்த சஷ்டி திருவிழாவில் கந்த சஷ்டி கவச பாராயணம் பாடினர். இசை ஆசிரியர் ஷர்மிளா முன்கல பயிற்சி வழங்கியிருந்தார். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள்ளழகர் கோயில் துணை ஆணையர் யங்ஞ நாராயணன் செய்திருந்தார். இம் மாணவிகள் தலைமை ஆசிரியர் செல்வராஜ் மேற்பார்வையில் கும்பகோணம் சங்கீத வித்வான் மணிகண்டனிடம் ஏற்கனவே 15 நாட்கள் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !