லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :4030 days ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. முத்தியால்பேட்டை ராமக்கிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலின், 44வது பிரம்மோற்சவ விழா, கடந்த 19ம் தேதி துவங்கியது. தினமும் காலை 10.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி காலை லட்சுமி ஹயக்ரீவர், லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 8.00 மணிக்கு லட்சுமி ஹயக்ரீவர், தாயார் திருக்கல்யாணம் நடந்தது. நாளை (27ம் தேதி) வெண்ணைத்தாழி உற்சவம் நடக்கிறது.