உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண்சுமந்த நிகழ்ச்சி!

கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண்சுமந்த நிகழ்ச்சி!

திருவெண்ணெய் நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த  நிகழ்ச்சி நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் ம ங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில், பிட்டுக்கு மண் சுமந்த  நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன் காலத்தில் மதுரையை அரிமர்த்தன  பாண்டியன் ஆட்சி செய்தார். அப்போது வைகை அணையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், அணையை அடைக்க வீட்டிற்கு ஒரு ஆள் வர÷ வண்டுமென கட்டளையிட்டார். வந்தி என்னும் மூதாட்டிக்கு யாரும் இல்லாததால் சிவபெருமானே கூலியாளாக சென்று, பிட்டுவை கூலியாக  பெற்று அணையை அடைத்ததாக வரலாறு கூறுகிறது. இதன் ஐதீக நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபி ஷேகமும், மாலை 4:30 மணிக்கு திருவீதியுலாவும் நடந்தது. கையில் மண்வெட்டியுடன் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமான் மலட்டாற்றை நோக்கி  புறப்பட்டார். மாலை 6:30 மணிக்கு கரையில் சுவாமியை நிறுத்தி விட்டு குருக்கள் ரவி ஆற்றில் இறங்கி, அணையை அடைக்கும் ஐதீகத்தை செய்தார்.  தொடர்ந்து மேலமங்கலம் குமாரசாமிதம்பிரான்சுவாமிகள் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர்  வெங்கட கிருஷ்ணன், வாணிய சமூகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !