உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எம்.குன்னத்தூர், சேந்தநாடு கோவில்களில் கும்பாபிஷேகம்!

எம்.குன்னத்தூர், சேந்தநாடு கோவில்களில் கும்பாபிஷேகம்!

உளுந்தூர்பேட்டை: எம்.குன்னத்தூர், சேந்தநாடு கிராமங்களிலுள்ள கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.உளுந்தூர்பேட்டை தாலுகா  எம்.குன்னத்தூர் அய்யனார் கோவில், சப்தகன்னிகள் சமேத மூங்கிலம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 19ம் தேதி காலை 7:00  மணிக்கு விநாயகா பூஜை, கணபதி ஹோமம், தீபாரதனையும், மாலை 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், இரவு 10:00 மணிக்கு முதல் கால யாக  சாலை பூஜைகள், 20ம் தேதி காலை 6:00 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து 10.30 மணிக்கு கடம் புறப்பாடும், ÷ காபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.  உளுந்தூர்பேட்டை தாலுகா, சேந்தநாடு கிராம ஸ்ரீவலம்புரி விநாயகர்,  ஸ்ரீகன்னிமார் சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 19ம் தேதி மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை,  விக்னேஸ்வர பூஜை, யாக சாலை பிரவேசம், முதல் கால யாக சாலை பூஜை, தீபாரதனையும், 20ம் தேதி 2ம் கால யாக சாலை பூஜைகள், ஹோமம்,  மாலை 6:00 மணிக்கு 3ம் கால யாக சாலை பூஜைகள், 21ம் தேதி காலை 5:00 மணிக்கு 4ம் கால யாக சாலை பூஜைகள், ஹோமம், நாடி சந்தானம்,  மஹாபூர்ணாஹூதி நடந்தது. அதனை தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !