சித்தானந்த சுவாமியின் 101 வது மகாகுரு பூஜை விழா!
காரைக்கால்: காரைக்கால் அக்கரைவட்டம் கிராமத்தில் சித்தானந்த சுவாமியின் 101 வது மகாகுரு பூஜை விழா நேற்று நடந்தது. காரைக்கால் அக்கரைவட்டம் கிராமத்தில் சித்தானந்த சுவாமிகள் கோவில் உள்ளது. இங்கு 101வது ஆண்டு மகாகுருபூஜை விழா நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு திருமலைராயன் ஆற்றிலிருந்து பால் குடம் ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடங்களை ஊர்வலமாக கொண்டுவந்து அபிஷேகம் நடந்தது. காலை 11 மணிக்கு அசுவத்பூஜை, கோ பூஜை, கஜபூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து 12 மணிக்கு குருபூஜை நடந்தது. இதில்,சூரியனார் கோவில் ஆதீனம் சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலையில் குரு பூஜை நடந்தது. இன்நிகழ்ச்சியில் முன்னால் கொம்யூன் பஞ்சாயத்து தலைவி கீதா ஆனந்தன் அக்கரைவட்டம் விழாக்குழுவினர்கள் பழனிவேல், முருகானந்தம், சிவானந்தம், உத்திரபாதி, முருகேசன், அன்பழகம் மற்றும் கிராமவாசிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இரவு சித்தானந்த சுவாமிகளின் வீதி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மற்றும் கிராம வாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.