கோவில்கள் வழிபாட்டுக்குழு ஐந்தாம் ஆண்டு விழா
காஞ்சிபுரம்: திருக்கோவில்கள் வழிபாட்டுக்குழுவின், ஐந்தாம் ஆண்டு விழா, காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்தில், வரும், 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 2:00 மணிக்கு,. ெஜயேந்திரர் முன்னிலையில் நடக்கிறது.குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கிராமப்புற திருக்கோவில்கள் வழிபாட்டு தொண்டர்கள், திரளாக இந்த வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மேலும், கிராமப்புற கலைஞர்கள், பஜனை குழுக்கள் பங்கேற்று, அவர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.அவர்கள், தங்கள் கிராமங்களில் உள்ள தொன்மைவாய்ந்த கோவில்கள் குறித்து எடுத்துக்கூறுவதுடன், தங்களின் சந்தேகங்களை குறிப்பிட்டு, ெஜயேந்திரரிடம் விளக்கம் பெறுகின்றனர். விழாவில், பசுவை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும், பசு நமக்களிக்கும் நன்மைகள் பற்றியும், மனித இனத்திற்கு பசுவில் இருந்து கிடைக்கும் இன்றியமையாத பொருட்களை பற்றியும், பசுவே நமது வாழ்வியல் சித்தாந்தம் என்ற தலைப்பிலும், ஓர் கலந்துரையாடல் ெஜயேந்திரர் முன்னிலையில் நடக்கிறது. மேலும், கிராமத்தை நோக்கி என்ற தலைப்பில், இயற்கை விவசாயம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி மாணவர்கள், அன்றாட நகர வாழ்க்கையை விட்டு, சற்று விலகி கிராமங்களில் ஒருநாள் முழுவதும் தங்கி, அங்குள்ள திருக்கோவில்கள், ஏரி, குளங்கள் விவசாய முறைகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக, விவசாய சுற்றுலா திட்டத்தை விளக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எத்தனையோ, கிராம திருக்கோவில்களில், தொடர்ந்து தீபம் ஏற்றுவதற்காக பல அன்பர்கள் எண்ணெய் அளித்து வருகின்றனர். அந்த திருப்பணியில் பலரையும் மேலும் இணைத்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள அன்பர்கள் அனைவரும், இந்த ஆன்மிக விழாவில், தவறாமல் பங்கேற்று, ெஜயேந்திரரின் அருளாசி பெறலாம். மேலும், தகவல்களுக்கு சே.விஸ்வநாதன் 94443 80697 மற்றும் கே.கண்ணன் 98410 20857 ஆகியோரை அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.