ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில் ஏகாதசி விழா!
ADDED :3728 days ago
ஆனைமலை: ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி விழா நடந்தது. ஆனைமலையில் பெரிய கடை வீதியில் அமைந் துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது. இந்த ஏகாதசி விழாவையொட்டி நடந்த வரலட்சுமி பூஜையில், நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று மாங்கல்ய பலம் வேண்டி விளக்கேற்றி வழிபட்டனர். சிறப்பு பூஜையை முன்னிட்டு, இறைவனுக்கு மஞ்சள் , சந்தனம் உள்ளிட்ட 9 வகையான பொருட்களால் அபிேஷகமும், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட 9 வகையான மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய் திருந்தனர்.