மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
3665 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
3665 days ago
காரைக்குடி: காரைக்குடி நகர சிவன்கோயில் கும்பாபிஷேக பணி கடந்த பிப்.11ல் பாலாலயத்துடன் துவங்கியது. கும்பாபிஷேக விழா கடந்த 21-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கப்பட்டது. 24-ம் தேதி முதல்கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 5.45 மணிக்கு ஆறாம் கால பூஜை, 8 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, 8.15 மணிக்கு கடம் புறப்பாடு, 9.15 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுரம் கும்பாபிஷேகம், மூலவர் பரிவார மூர்த்திகளுக்கான கும்பாபிஷேகம் நடந்தது. 11.30 மணிக்கு மஹாபிஷேகம், மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 9 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டி தலைவர் எம்.ஆர்.பி.எல்.,சிதம்பரம், நடப்பு காரியக்காரர் பி.எல்.சொக்கலிங்கம், அறங்காவலர்கள் சேவு மெய்யப்ப செட்டியார், கே.டி.கதிரேசன், திருப்பணி குழுவினர், நகரத்தார் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் நிர்வாகத் தினர் செய்திருந்தனர். விழாவில் எஸ்.சுப்பிரமணியன், ரெத்தினசாமி, ஆர்.பி.காசி விஸ்வநாதன், பழ.பாலு ஸ்தபதி, அடைக்கலம் ஸ்தபதி, சேதுராமன் ஆச்சாரி, குரு.பஞ்ச நாதன், சந்திரசேகர், நாகராஜன், குமாரசாமி, பங்கேற்றனர்.
3665 days ago
3665 days ago