திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்!
ADDED :4028 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், வரும் பவுர்ணமிக்கு, பக்தர்கள் கிரிவலம் நேரம் குறித்து, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து, 14 கி.மீ தூரம் உள்ள மலையை, கிரிவலம் வந்து வழிபட்டு செல்கின்றனர். ஆவணி மாதம் பவுர்ணமி கிரிவலம் வரும் பக்தர்கள், 29ம் தேதி, அதிகாலை, 3 மணி முதல் 30ம் தேதி, அதிகாலை, 1 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.