உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுப்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம்!

புதுப்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம்!

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, 26ம் தேதி  காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம்  நடந்தது. மாலை 6:00 மணிக்கு கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால  யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று (27ம் தேதி) காலை 6:00 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை, 108 வகை  திரவியங்கள், தீபாராதனை, யாத்ராதானம், கடம்புறப்பாடாகி காலை 8:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !