சிவகங்கை செல்வகணபதி ஆலய கும்பாபிஷேகம்!
ADDED :3798 days ago
சிவகங்கை: சிவகங்கை செல்வகணபதி ஆலய கும்பாபிஷேக பணிக்காக பாலாலய பூஜை நடந்தது. சிவகங்கை நேருபஜாரில் பழமையான செல்வ கணபதி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்துவதென திருப்பணிக்குழுவினர் முடிவு செய்தனர். கும்பாபிஷேக திருப்பணிக்கான பாலாலய பூஜை நேற்று கோயிலில் நடந்தது. பூஜைகளை குமார், ஸ்ரீதர் குருக்கள் செய்தனர். நேற்று காலை 9:30 மணி முதல் பகல் 12 மணி வரை யாகசாலை பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பணிக் குழுவினர் ஏற்பாட்டை செய்தனர்.