வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3798 days ago
கள்ளக்குறிச்சி : மோ.வன்னஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 25ம் தேதி பூர்வாங்க பூஜையுடன் விழா துவங்கியது. மூன்று நாள் பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடந்த பின், நேற்று காலை 9:00 மணிக்கு, கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. வைபவத்தை திருவதிகை ரகுநாதர் பட்டாட்ச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராமதாஸ் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.