மயிலம் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :3796 days ago
மயிலம் : மயிலம் பகுதியிலுள்ள கோவில்களில் பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடந்தது. ஆலகிராமத்திலுள்ள எமதண்டீஸ்வரர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை சுந்தரமூர்த்தி குருக்கள் செய்திருந்தார்.மயிலம் சுந்தர விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் பிர தோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தென்பசியார், கொல்லியங்குணம் சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனை நடந்தது.பாதிராப்புலியூர் சிவன் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு வழிபாடுகள் செய்தனர். பின்னர் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.