உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விடங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!

விடங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!

கிள்ளை: சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் ஸ்ரீபர்வதம்பாள் சமேத விடங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டுடன் நேற்று சிவகாமசுந்தரி  சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் ஸ்ரீபர்வதம்பாள் சமேத விடங்கேஸ்வரர் கோவில் உள்ளது.  இக்கோவிலில் பிரதோஷ வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் வெகு விமர்சியாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த பிரதோஷத்தை  முன்னிட்டு நந்திக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. கோவில் பிரகாரத்தில் உள்ள குரு தட்சணாமூர்த்தி சந்தனக்காப்பு  அலங்காரத்ததில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஓய்வு பெற்ற மீன்வள ஆய்வாளர் இக்கோவிலில் தொடர்ந்து 202 பிரதோஷத்தில் சிவபுராண  சொற்பொழி வாற்றினார். உற்சவர்களான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு முறை நடக்கும் மகா அபிஷேகம், நேற்று திரு÷ வாண நட்சத்திரத்தில் நடந்தது. கோவில் அர்ச்சகர் ஜெகதீச குருக்கள் பூஜைகளை செய்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !