வரலட்சுமி விரத பூஜை: கோவில்களில் வழிபாடு!
குன்னுார்: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. குன்னுார் துர்கையம்மன் கோவிலில், விளக்கு பூஜை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். குன்னுார் சவுடேஸ்வரியம்மன் கோவிலில், வளையல் அலங்காரம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தன. திருவோணத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், பூனுால் அணியும் நிகழ்ச்சியும் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டனர். துர்கையம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகள், நடந்தன. குன்னுார் தந்திமாரியம்மன், மாசாணியம்மன், கன்னிமாரியம்மன், ஓட்டுப்பட்டறை முத்தாலம்மன், செல்லாண்டியம்மன் உட்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு அலங்காரம், வழிபாடுகள், பூஜைகள் நடந்தன. பெண்களுக்கு மாங்கல்யப் பொருட்கள் வழங்கப்பட்டன.