ஏழைப்பிள்ளையார் கோவிலில் 30ம் ஆண்டு பிரம்மோற்சவம்!
ADDED :3742 days ago
புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதி சின்னக்கடை அருகில் உள்ள ஏழைப் பிள்ளையார் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்தது. இதையொட்டி கடந்த 19ம் தேதி மாலை 6.30 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை துவங்கியது. 20ம் தேதி இரவு 7 மணிக்கு, சுவாமி சூரிய பிரபையில் வீதியுலா நடந்தது. நேற்று முன் தினம் இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் வீதியுலா, நேற்று காலை 9.30 மணிக்கு திருத்தேர் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தனி அதிகாரி விஜயன், விஜயஆனந்தன் குருக்கள் உட்பட பலர் செய்திருந்தனர்.