உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவி மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி விரத பூஜை!

தேவி மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி விரத பூஜை!

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவிலில், சுமங்கலி பெண்கள் வரலட்சுமி விரதமிருந்து வழிபட்டனர். வரலட்சுமி  விரதத்தையொட்டி, நேற்று காலை தேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுமங்கலி பெண்கள் அம்மனுக்கு  விளக்கேற்றி, 9 வகையான பழங்கள் வைத்து, மஞ்சள் கயிற்றில் 9 முடிச்சுகள் போட்டு, விரதமிருந்தனர். பின்னர், சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள்,  குங்குமம் உள்ளிட்ட சுமங்கலி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !