முக்குளம் பிடாரி செல்லியம்மனுக்கு சிறப்பு வழிபாடு!
ADDED :3742 days ago
பெண்ணாடம்: பெண்ணாடம் முக்குளம் பிடாரி செல்லியம் மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆவணி இரண்டாம் வெள்ளியையொட்டி, நேற்று காலை 9:00 மணியள வில் அம்மனுக்கு பால், சந்தனம், தயிர், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரத்தில் அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.