உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் கோவிலில் நாளை ஆராதனை துவக்கம்!

ராகவேந்திரர் கோவிலில் நாளை ஆராதனை துவக்கம்!

கடலூர்: கடலூர் கூத்தப்பாக்கம் ராகவேந்திர சுவாமிகள் கோவிலில் ஆராதனை விழா நாளை துவங்குகிறது.  கடலூர் கூத்தப்பாக்கத்தில் உள்ள  ராகவேந்திர சுவாமிகள் கோவிலில் 344ம் ஆண்டு ஆராதனை விழா நாளை (30ம் தேதி) துவங்கி வரும் 1ம் தேதி வரை 3 நாட்கள் நடத்த ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தினமும் அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், நிர்மால்யம், வேத பாராயணம், 9:30 மணிக்கு சிறப்பு அ பிஷேகம், பூஜை, பகல் 12:00 மணிக்கு அலங்காரம், ஹஸ்தோதகம், இரவு 8:30 மணிக்கு ஸ்வஸ்தி, பல மந்த்ராட்சதை நடக்கிறது. தொடர்ந்து 30ம் ÷ ததி மாலை 6:00 மணிக்கு கோபி பாகவதர் குழுவினரின் பாண்டுரங்க லீலை நிகழ்ச்சி, 31ம் தேதி காலை 9:00 மணிக்கு பாலச்சந்தர், பாலமுருகன்  குழுவினரின் நாதஸ்வர இசை, மாலை 6:30 மணிக்கு முரளீதர சர்மாவின் சொற்பொழிவு, 1ம் தேதி மாலை 6:00 மணிக்கு ராகவேந்திர சுவாமி பஜனா  மண்டலி குழுவினரின் ஹரிநாம சங்கீர்த்தனம் நடக்கிறது.  ஆராதனைக்கு பச்சரிசி, பருப்பு, வெல்லம், பால், நெய், தேன் மற்றும் அபிஷேக திரவிய ங்கள் வரவேற்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை ஸ்ரீமத்வ சித்தாந்த சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !