உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேம்புலி அம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா துவக்கம்

வேம்புலி அம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா துவக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வேம்புலி அம்மன் கோவிலில், ஜாத்திரை திருவிழா, காப்பு கட்டுதலுடன் நேற்று, துவங்கியது.திருவள்ளூர், வேம்புலி அம்மன் கோவிலில், 10 நாட்கள் ஜாத்திரை உற்சவம் நடைபெற உள்ளது. இதையடுத்து, நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று, மதியம், 2:00 மணியளவில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்று, காலை 8:00 மணிக்கு, அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற உள்ளது.இதே போல், தொடர்ந்து 10 நாட்கள் வரை, அம்மன், புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வரும், செப்., 5ம் தேதியுடன், ஜாத்திரை திருவிழா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !