உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படவேட்டம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

படவேட்டம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

திருத்தணி: வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, படவேட்டம்மன் கோவிலில், 108 பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.திருத்தணி, மடம் கிராமத்தில், படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, 108 பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. விழாவை ஒட்டி, காலை 9:30 மணிக்கு, ம.பொ.சி., சாலையில் உள்ள, சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து, 108 பெண்கள் தலையில் பால்குடங்களை சுமந்தவாறு, ஊர்வலமாக புறப்பட்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்று, சரவணப்பொய்கையை ஒரு முறை வலம் வந்து, அம்மன் கோவில் வந்தடைந்தனர். காலை 10:30 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !