உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம்!

தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம்!

திண்டிவனம் : தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு, திருவோண தீபம் ஏற்றப்பட்டது. தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு, ஒவ்வொரு திருவோண தீபம் ஏற்றப்படுகிறது. அதேபோல் நேற்று திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு அபிஷேகம் நடந்தது. பின், வெள்ளி கவசத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு கோவி லுக்கு எதிர்புறத்திலுள்ள 32 அடி உயரமுள்ள கல்கம்பத்தில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகத்தா முனுசாமி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !