மேலூரில் 1008 கஞ்சி கலய ஊர்வலம்!
மேலூர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு, மேலூர் நொண்டிக்கோயில்பட்டியில், ஆதிபராசக்தி மன்றம் சார்பில் 1008 கஞ்சி கலயம், முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம் நடந்தது. மாவட்ட செயலாளர் மோகன், இளைஞரணி இணை செயலாளர் செல்வம், மாவட்ட மகளிரணி இணை செயலாளர் பனிமலர் தலைமை வகித்தனர். பாலமேடு: சித்தர் சக்தி பீடத்தின் ஆண்டு விழா, வருடாபிஷேக விழா ஆதிபராசக்தி சக்தி பீடம் தலைவர் அசோகன் தலைமையில் நடந்தது. யாகசாலை பூஜையை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சின்னத்தம்பி, சரஸ்வதி துவக்கினர். துணைத்தலைவர்கள் கோகுல்நாத் பிரேம்சந்த், காளிதாஸ், பிரசார குழு பேராசிரியர் சோமசுந்தரம், மதுரை மாநகராட்சி கமிஷனர் மனைவி தேன்மொழி முன்னிலை வகித்தனர். கஞ்சி கலய ஊர்வலத்தை ஓய்வுபெற்ற போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் துவக்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கஜேந்திரன் முன்னிலையில், அன்னதானத்தை ஊராட்சி தலைவர் மாரிமுத்து துவக்கினார்.