உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வருவாயில் முதலிடம் பிடித்தது மலே மாதேஸ்வரா கோவில்!

வருவாயில் முதலிடம் பிடித்தது மலே மாதேஸ்வரா கோவில்!

மைசூரு: சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள, மலே மாதேஸ்வரா கோவில், இந்தாண்டு, 42 கோடி ரூபாயை தாண்டி வருவாய் பெற்றதால், மாநில  அளவில் வருவாயில் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த, 2008ம் ஆண்டு, 25 கோடி ரூபாய் வருவாய் பெற்றிருந்த, மலே மாதேஸ்வரா கோவில்,  2013–14ல், 31 கோடி ரூபாயாகவும்; 2014–15ல், 42 கோடி ரூபாயாகவும் வருவாய் பெற்றது.  தட்சிண கன்னடாவிலுள்ள குக்கே சுப்பிரமணியா ÷ காவில் தான், மாநிலத்தில் அதிக வருவாய் பெறும் கோவிலாக விளங்கி வந்தது.  இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, மலே மாதேஸ்வரா  கோவில், அதிக வருவாய் ஈட்டும் கோவிலாக, மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. தற்போது, இக்கோவிலுக்கு நேரடியாக வந்து பூஜை  செய்ய முடியாதவர்களின் வசதிக்காக, ‘இ–பூஜா சேவை’ துவங்கப்பட்டு உள்ளது. ஆன்–லைன் மூலம் பூஜைகள் நடத்தவும், நன்கொடைகளை  பெறவும் வசதி செய்யப்பட்டு உள்ளதால், பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !