உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை!

வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை!

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை அம்பாள் பெரிய நாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சாயரட்சை பூஜை நடந்தன. மாலை 5.15 மணிக்கு பக்தர்கள் நான்கு மாடவீதிகளை வலம் வருதல் நடந்தது. இரவு 7.00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பதினாறுகால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !