செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி!
ADDED :3817 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம், செம்பொற்சோதிநாதர் கோவிலில் சதய நட்சத்திர தினமான நேற்று திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. சிவபெருமானுக்கு உகந்த பன்னிரு சைவத்திருமுறைகளில், 8ம் திருமுறையாக திருவாசகம் உள்ளது. மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின் 51 பதிகங்களையும் அதிலுள்ள 658 பாடல்களையும் செம்பொற்சோதிநாதர் கோவில் ஓதுவார்கள் காலை முதல் மதியம் வரை ஓதினர். ஏராளமான பக்தர்கள் திருவாசகம் முற்றோதலில் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து திருமுறை பாடல் பயிற்சியும், திருநாவுக்கரசு நாயனார் திருக்கூட்டத்தினர் உழவாரப்பணியும் மேற்கொள்ளப்பட்டது.