உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வண்டிமேடு கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம்!

வண்டிமேடு கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம்!

விழுப்புரம்: விழுப்புரம், வண்டிமேடு ராஜீவ்காந்தி வீதியில் அமைந்துள்ள மேல்மருவத்துõர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடி கஞ்சி  வார்த்தல் விழா நடந்தது. விழாவையொட்டி அப்பகுதியில் உள்ள கோவிலில் நேற்று காலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,  ஆராதனைகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட கஞ்சி கலய ஊர்வலத்தை மாவட்ட தலைவர் ஜெயபால்  துவக்கி வைத்தார். மன்ற தலைவர் சண்முகம் தலைமையில் பக்தர்கள் புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை  வந்தடைந்தது. பகல் 12:00 மணிக்கு கஞ்சி வார்த்தல் விழா நடந்தது.பொறுப்பாளர்கள் கண்ணன், கார்த்திகேயன், நக்கீரன், மகளிரணி தெய்வானை,  விஜயா, மலர்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !